ADDED : செப் 28, 2024 04:00 AM
சேந்தமங்கலம்: இன்று புரட்டாசி, 2வது சனிக்கிழமையொட்டி, நேற்று மாலை நைனாமலைக்கு பக்தர்கள் வரத்து அதிரித்தது. இதனால், வீர ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சேந்தமங்கலம் அருகே, நைனாமலையில் பிரசித்தி பெற்ற வருத-ராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு-தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்-தர்கள், வெள்ளிக்கிழமை இரவு முதல் கோவிலுக்கு வந்து அடி-வாரத்தில் உள்ள ஆஞ்சநேயர், மலையில் உள்ள வரதராஜ பெரு-மாளை தரிசனம் செய்து விட்டு விரதம் கடைப்பிடிப்பர்.இதனால், நேற்று நைனாமலை அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்ச-நேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்-யப்பட்டது. தொடர்ந்து, வீர ஆஞ்சநேயருக்கு மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த அலங்கா-ரத்தில் ஆஞ்சநேயர், இன்று மதியம் வரை பக்தர்களுக்கு அருள்-பாலிப்பார் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.