/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு
/
வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு
வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு
வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு
ADDED : அக் 25, 2024 08:02 AM
பள்ளிப்பாளையம்: சின்னார்பாளையம் பகுதியில், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் பாய்ந்த சரக்கு வாகனம் பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியில், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. இதில் பாசனத்திற்கு தண்ணீர் செல்-கிறது. வாய்க்கால் அருகில் டூவீலர், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் தார்-சாலை உள்ளது. நேற்று காலை வெப்படையில் இருந்து, பள்ளிப்பாளையத்திற்கு சரக்கு வாகனம் ஒன்று வாய்க்கால் சாலையில் சென்-றது.
சின்னார்பாளையம் வரும் போது, சரக்கு வாகனம் நிலை தடுமாறி வாய்க்காலில் பாய்ந்-துள்ளது. அதிர்ச்சியடைந்த டிரைவர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினார். சரக்கு வாகனம் வாய்க்காலில் செல்லும் தண்-ணீரில் இறங்கியது. உடனடியாக பொக்லைன் மூலம், சரக்கு வாகனம் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.