/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்
/
மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்
மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்
மதுவிலக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் 27ல் பொது ஏலம்
ADDED : நவ 19, 2024 01:33 AM
நாமக்கல், நவ. 19-
'நாமக்கல்லில், வரும், 27ல், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது' என, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட மதுவிலக்கு குற்றத்தில், ஒரு நான்கு சக்கர வாகனம், 24 டூவீலர்கள் என, மொத்தம், 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், வரும், 27 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்,
எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி., தன்ராசு ஆகியோர் முன்னிலையில், பொது ஏலத்தில் விடப்படும்.
வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர், வரும், 26 காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில், வாகனங்களை பார்வையிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், 27 காலை, 9:00 மணிக்கு, 5,000 ரூபாய் முன்பணமாக, நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜி.எஸ்.டி., வரி முழுமையாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.