/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தகுதி சான்றில்லாத வாகனங்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு எச்சரிக்கை
/
தகுதி சான்றில்லாத வாகனங்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு எச்சரிக்கை
தகுதி சான்றில்லாத வாகனங்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு எச்சரிக்கை
தகுதி சான்றில்லாத வாகனங்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 05, 2025 01:23 AM
ராசிபுரம், ராசிபுரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், தகுதி சான்றை புதுப்பிக்காத, 8 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மேலும் அதிக பாரத்துடன் வந்த டிரைவர்களை எச்சரித்து அனுப்பினார்.
ராசிபுரம் பகுதியில், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தகுதி சான்று புதுப்பிக்காத, 4 சரக்கு ஆட்டோக்கள், கனரக சரக்கு வாகனம், 1 என, 5 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட வாகனங்களை ராசிபரம் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வெண்ணந்துார் பகுதிகளில் சோதனையின் போது கண்டறியப்பட்ட தகுதி சான்று புதுப்பிக்கப்படாத, 2 சரக்கு ஆட்டோ, ஒரு பயணியர் ஆட்டோ பிடிக்கப்பட்டு வெண்ணந்துார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 8 வாகனங்களும் மேல் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று அதிக பாரம் ஏற்றி வந்த, 4 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் டிரைவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். சிறப்பு வாகன தணிக்கை மூலம், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.