/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம்
/
வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம்
ADDED : நவ 03, 2024 02:28 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், நேற்று கட்சி அலு-வலகத்தில் நடந்தது. தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வரும், 5-ல் நாமக்கல்லுக்கு வருகை தரும் மாநில காங்., தலைவர் செல்வ பெருந்தகைக்கு வரவேற்பு அளிப்பது. வெண்ணந்துாரில் உள்ள கூட்டுறவு கைத்தறி சங்கத்தில், கடந்த, இரண்டு மாதங்களாக நெசவாளர்கள் வேட்டி தயார் செய்து கொடுக்க பாவு, நுால் வழங்கப்படாத நிலை உள்ளது.இதனால் கைத்தறி நெசவாளர்கள் வேலை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக நெச-வாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்துார் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். மக்கள் நலன் கருதி பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.