/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறல் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்
/
கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறல் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்
கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறல் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்
கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறல் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்
ADDED : அக் 27, 2024 01:19 AM
மோகனுார், அக். 27-
மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தியில், 180 ஏக்கரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இதில், ஏராளமான சீமை கருவேல மரங்கள் படர்ந்துள்ளன. இந்த ஏரியில் தெரு நாய்கள் அதிகளவில் உலக வருகின்றன. அங்கு சுற்றுத்திரியும் தெருநாய்கள், அப்பகுதியில் குவிக்கப்படும் கோழிகழிவுகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை உட்கொண்டு வருகின்றன. இந்த ஏரியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆடு, மாடுகளை தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, ஏரி அருகில் உள்ள விவசாய நிலத்தில், ஐயந்தோட்டம் ரவி என்பவர், தனது கன்று குட்டியை கட்டியிருந்தார். அங்கு வந்த, 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள், கன்று குட்டியை கடித்து குதறின. சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் தெருநாய்களை விரட்டி அடித்தனர். கன்று குட்டி ஆபத்தான நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆடுகளையும் தெரு நாய்கள் கடித்து குதறின. தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கால்நடைகளை தாக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.