/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

ADDED : ஜூன் 18, 2025 01:19 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவி பகுதியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், இதனால் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுவதாகவும் புகார்
எழுந்தது.
இதையடுத்து, பஞ்., நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறை மூலம் அப்பகுதியில் நில அளவீடு பணியை சமீபத்தில் தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகம் வந்த அப்பகுதி மக்கள், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஆர்.ஐ., பிரகாசம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தாசில்தார் வெங்கடேஸ்வரன், ''உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே, மேதரமாதேவி கிராமத்தில் நில அளவீடு பணி நடக்கிறது. ஆக்கிரமிப்பு இருந்தால் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இணைந்து, பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,''
என்றார்.
இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தைை கைவிடடு கலைந்து சென்றனர்.