/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்ட எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமத்தினர் மனு

ADDED : மே 27, 2025 01:44 AM
நாமக்கல், 'அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உதவ வேண்டும்' என, செங்கோடம்பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, செங்கோடம்பாளையம் சின்ன ஆலமரம்
பகுதியில், 20 குடும்பத்தினர், 12 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும், தெப்பக்குளம் விரிவாக்க பணிக்காக இடமாறுதல் செய்யப்பட்டவர்கள். தற்போது குடியிருக்கும் பகுதிக்கு, 2024 ஆக., 27ல், அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் வசதி
வழங்கப்பட்டது. நாங்கள் இதற்கு முன், பாதை வசதி கேட்டு மனு அளித்திருந்தோம்.
தொடர்ந்து, வீடு கட்டி குடியிருக்க அரசு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி, குடியிருப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் பகுதியில் அருகே வசிப்பவர்கள், வீடு
கட்டினால், தீவைத்து எரித்து
விடுவோம் என, மிரட்டுகின்றனர். அரசு வழங்கிய நிலம் தான் எங்களிடம் உள்ளது. வேறு இடம் இல்லை. இந்நிலையில், வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன், வீடு கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.