/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புயலால் விழுப்புரம் மாவட்டம் பாதிப்பு ; நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ADDED : டிச 04, 2024 06:52 AM
நாமக்கல்: 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மேலும், டிச., 1ல், 'பெஞ்சல்' புயல் கரையை கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், காற்றின் வேகம் மணிக்கு, 90 கி.மீ., வேகத்தை தொட்டதால், அதிகளவில் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், 11.45 லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகை பொருட்கள், பால் பவுடர், பாய், போர்வை, நைட்டி, லுங்கி, நாப்கின்கள், பெட்ஷீட், தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான நிவாரண பொருட்களை, 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு கொண்டு செல்லும், 2 கனரக வாகனங்களை, கலெக்டர் உமா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.