/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்களுக்கு வன்முறை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண்களுக்கு வன்முறை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 26, 2024 01:52 AM
பெண்களுக்கு வன்முறை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல், நவ. 26-
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை, மத்திய அமைச்சகத்தின் மூலம், மாநிலம் முழுவதும், 227 பாலின வள மையம், வானவில் மையம் தொடங்கி வைத்தல், நவ., 25 முதல் டிச., 23 வரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரசார கையெழுத்து இயக்கம், பாலின பாகுபாடு உறுதிமொழி ஏற்றல், விழிப்புணர்வு பிரசார பதாகைகளை வினியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அரசு அலுவலர்களுக்கான பெண்கள் பாதுகாப்பு குறித்த விளக்கக் கூட்ட பயிற்சி நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.