/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காட்சி பொருளான பி.எஸ்.என்.எல்., டவர்
/
காட்சி பொருளான பி.எஸ்.என்.எல்., டவர்
ADDED : டிச 02, 2025 02:39 AM
நாமக்கல், 'பி.எஸ்.என்.எல்., டவர் செயல்படாததால், மொபைல் போன், கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அவற்றை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குட்லாம்பாறை கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனுார், கே.புதுப்பாளையம் பஞ்., குட்லாம்பாறையில், பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர் தற்போது செயல்படவில்லை. அதனால், மொபைல் போன், கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாமல், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். ஜெனரேட்டர் வசதியும் இல்லை. அதனால், போர்க்கால அடிப்படையில் பி.எஸ்.என்.எல்., டவர் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

