/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தையில் விரைவில் தொழிற்கல்வி மையம்
/
சேந்தையில் விரைவில் தொழிற்கல்வி மையம்
ADDED : டிச 12, 2024 01:26 AM
சேந்தமங்கலம், டிச. 12-
சேந்தமங்கலம் யூனியன், அக்கியம்பட்டியில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறை மூலம், 'மக்கள் தொடர்பு திட்ட முகாம்' நடந்தது. ஆர்.டி.ஓ., பார்த்திபன் வரவேற்றார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா, 328 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில், 1.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''சேந்தமங்கலம், கொல்லிமலை விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளன. இதனால், சேந்தமங்கலத்தில் விரைவில் நவீன வேளாண்மை உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொழிற்கல்வி மையம், இந்தாண்டிற்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் கூட இதில் சேர்ந்து பயன் பெறலாம்,'' என்றார். 'அட்மா' குழு தலைவர் அசோகன், டவுன் பஞ்., தலைவர் சித்ரா, தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.