/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 சட்டசபை தொகுதியில் வாக்காளருக்கு உதவி மையம் அமைப்பு: கலெக்டர் தகவல்
/
6 சட்டசபை தொகுதியில் வாக்காளருக்கு உதவி மையம் அமைப்பு: கலெக்டர் தகவல்
6 சட்டசபை தொகுதியில் வாக்காளருக்கு உதவி மையம் அமைப்பு: கலெக்டர் தகவல்
6 சட்டசபை தொகுதியில் வாக்காளருக்கு உதவி மையம் அமைப்பு: கலெக்டர் தகவல்
ADDED : நவ 16, 2025 02:25 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம்(எஸ்.சி.,), சேந்தமங்-கலம்(எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமார-பாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்-டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்-ளப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா-மூர்த்தி, மோகனுார், பரமத்தி, நாமக்கல், திருச்செங்கோடு, குமார-பாளையம் தாலுகா அலுவலகங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் வகையில், 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்-டுள்ளனர். இப்பணி வரும், டிச., 4 வரை நடக்கிறது. மாவட்-டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் உள்ள வாக்கா-ளர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் குறித்த தகவல்களுக்கு, தாலுகா அலுவலகங்களில் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுடன், வாக்காளர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு, முருகன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலர், 9445000232, 04287--222840, சேந்தமங்கலம், சுந்தரராஜன், தனி துணை கலெக்டர் 9445461743, 6282228034, -நாமக்கல், சாந்தி ஆர்.டி.ஓ., 9445000431, 04286--233901.
ப.வேலுார், கிருஷ்ணவேணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல-அலுவலர், 9445477850, 04268 -250099, திருச்செங்கோடு, லெனின், ஆர்.டி.ஓ., 9445000432, 04288 -253811, குமாரபா-ளையம் சட்டசபை தொகுதிக்கு, சுரேஷ்குமார், மாவட்ட ஆதிதி-ராவிடர் நல அலுவலர், 73388 01265, 04288 -246256.சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்திட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்-துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

