/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பீஹார் தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
பீஹார் தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : நவ 16, 2025 02:25 AM
நாமக்கல்: பீஹார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள, 243 இடங்களில், பா.ஜ., கூட்டணி, 202 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
குறிப்பாக, பா.ஜ., வேட்பாளர்கள், 89 பேர் வெற்றிபெற்றுள்-ளனர். இதையொட்டி, கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், பீஹார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின், 150வது பிறந்தநாள் விழா, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடந்தது. மாவட்ட தலைவர் சர-வணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவரும், ராசி-புரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பிர்சா முண்டாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், தேர்தல் வெற்றியை கொண்டாடினர். மாவட்ட எஸ்.டி., அணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் அருள், மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட அமைப்பாளர் சதீஷ், நகர தலைவர் தினேஷ், ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

