/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவம் வினியோகம்

ADDED : நவ 06, 2025 01:13 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான துர்கா மூர்த்தி, வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியை பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு படிவத்தை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில், 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர். ஒவ்வாரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு, 10 ஓட்டுச்சாவடிகள் வீதம் மொத்தம், 165 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பி.எல்.ஏ.,-பி.எல்.ஓ., சூப்பர்வைசர் மற்றும் பி.எல்.ஏ.,க்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்--2026 தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், வரும், டிச., 4 வரை, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வினி யோகம் மற்றும் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி, நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட லத்துவாடி, சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம், வளையப்பட்டி, உத்தரகிடி காவல் மற்றும் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தொட்டியம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியை பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு படிவத்தை வழங்கினார்.