/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருவட்டாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
/
கருவட்டாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
ADDED : அக் 12, 2025 02:43 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கரு-வட்டாறு ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடுகிறது.
சேந்தமங்கலம் அடுத்துள்ள மலை வாசஸ்தலமான கொல்லிம-லையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகி-றது.இதனால் அங்குள்ள எடப்புலிநாடு பகுதியில் உள்ள பெரி-யாற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த தண்ணீர் நேற்று முன்தினம் நள்ளிரவு அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பை கருவட்டாறு ஆற்-றுக்கு வந்தது.
கருவட்டாறு ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் அப்பகுதியில் உள்ள நடுக்கோம்பை, சின்ன காரவள்ளி, வெண்டாங்கி, பாண்டியாறு போன்ற கிராம பகுதிகளை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மலைப்பாதை முழுவதும் மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருவதால் கொல்லிமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.