/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : டிச 14, 2025 08:21 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் முழு-வதும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்-பட்டு வருகிறது. குறிப்பாக, கிராம ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், 'ஜல் ஜீவன்' திட்-டத்துடன் இணைக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதிகளுக்கு அதிகள-விலான தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதிக அழுத்தம் காரணமாக பல்வேறு இடங்-களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வீணாகி வருகிறது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா மேட்டுப்பகுதியில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகி சாலையோரம் பாய்ந்து வீணாகிறது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

