/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர்
/
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் நீர்
ADDED : டிச 27, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்., பகுதிகளில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தற்போது நடந்து வருகிறது.
இதில், வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 24 பஞ்., பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பய-னடைந்து வருகின்றனர். தற்போது, பிளாஸ்டிக் குழாய் ஆங்காங்கே உடைந்து விடுவதால், ஆயி-ரக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, குழாயை சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

