/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசியல் பிரமுகருக்கு வரவேற்பு எச்.எம்.,மிடம் விசாரிக்க முடிவு
/
அரசியல் பிரமுகருக்கு வரவேற்பு எச்.எம்.,மிடம் விசாரிக்க முடிவு
அரசியல் பிரமுகருக்கு வரவேற்பு எச்.எம்.,மிடம் விசாரிக்க முடிவு
அரசியல் பிரமுகருக்கு வரவேற்பு எச்.எம்.,மிடம் விசாரிக்க முடிவு
ADDED : செப் 22, 2024 02:47 AM
நாமக்கல்:அரசியல் பிரமுகருக்கு மாணவியர் மலர் துாவி வரவேற்பளித்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்த உள்ளதாக, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம், பெரியமணலி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செப்., 13ல், பள்ளி மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வந்திருந்தார். அவருக்கு, பள்ளி மாணவியர் வரிசையாக நின்று, மலர் துாவி வரவேற்றனர்.
இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ஹிந்து முன்னணி நிர்வாகி விக்னேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் கூறியதாவது:
நான் ஒரு வாரமாக விடுமுறையில் இருந்து, நேற்று தான் பணியில் சேர்ந்தேன்.
இந்த நிகழ்ச்சி என் கவனத்திற்கு வந்தது. இது தொடர்பான விபரங்களை முழுமையாக சேகரித்து, பள்ளி தலைமையாசிரியரிடம் செப்., 23ல், (நாளை), விசாரணை நடத்த இருக்கிறேன்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அது சம்பந்தமாக அழைத்து பேசி அறிவுரை கூற உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.