/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.95.46 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : ஜன 21, 2025 06:38 AM
நாமக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 16 பயனாளிகளுக்கு, 95.46 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்-கப்பட்டன.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வச-திகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 483 மனுக்கள் வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, தாட்கோ மூலம், 12 பேருக்கு, 95.25 லட்சம் ரூபாய்
மதிப்பில் நன்னிலம் மகளிர் வேளாண் நிலம் வாங்குதல், ஆடு வளர்ப்பு, சுமை வாகனம், பய-ணியர் வாகனம், கறவை மாடு மற்றும் ஸ்டுடியோ அமைத்தல் உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ள தொழில் கடனுதவிகளை
வழங்கினார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு, கிரட்சஸ், கைதாங்கி, கருப்பு கண்ணாடி மடக்கு குச்சி மற்றும் ப்ரெய்லி கடிகாரம், ஈமச்சடங்கு, இயற்கை மரண உதவித்தொகை காசோலைகள் என மொத்தம், 16
பேருக்கு, 95.46 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்-றனர்.