/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1,204 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
1,204 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : அக் 31, 2025 01:08 AM
நாமக்கல், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 1,204 பேருக்கு, 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், எரும பட்டி பேரூராட்சி மற்றும் மோகனூர் பேராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 1,204 பயனாளிகளுக்கு, 1.75  கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.எல்.ஏ., ராமலிங்கம்  முன்னிலை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூவருக்கு,  3,23,595 ரூபாய் மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில், இருவருக்கு, 82,441 ரூபாய் மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 114 பயனாளிகள், வருவாய்த்துறை சார்பில், 783 பேருக்கு, 1,32,14,610  ரூபாய் மதிப்பிலும், பேரூராட்சிகள் துறை சார்பில், 55 பேர், தொழிலாளர் நலத்துறை சார்பில், 110 பயனாளிகளுக்கு, 24,53,600 ரூபாய் உள்ளிட்ட, 1,204 பயனாளிகளுக்கு,, 1.75 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அட்மா குழு தலைவர்கள் நவலடி, பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதி
நிதிகள் கலந்து கொண்டனர்.

