/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர் 96 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
துாய்மை பணியாளர் 96 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
துாய்மை பணியாளர் 96 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
துாய்மை பணியாளர் 96 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 10, 2025 12:51 AM
நாமக்கல், தமிழக துாய்மை பணியாளர் நலவாரியம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி, 96 துாய்மை பணியாளர்களுக்கு, 50,000 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''துாய்மை பணியாளர்கள் அனைவரும், கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். பகுதி நேர துாய்மை பணியாளர்களை, முழுநேர பணியாளர்களாக அங்கீகாரம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கவும் முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஆர்.புதுப்பட்டி, பொத்தனுார், வெண்ணந்துார், படவீடு, மல்லசமுத்திரம், பரமத்தி டவுன் பஞ்.,கபிலர்மலை, எலச்சிப்பாளையம், மோகனுார் ஒன்றியங்கள் மற்றும் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் நகராட்சி களில் பணியாற்றும், 96 துாய்மை பணியாளர்களுக்கு கண் கண்ணாடி, கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட் கார்டு என, 50,000 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, டி.ஆர்.ஓ., சுமன், தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் கனிமொழி உள்பட பலர்
பங்கேற்றனர்.