/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
'உங்களுடன் ஸ்டாலின்' பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
'உங்களுடன் ஸ்டாலின்' பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடியில் நலத்திட்டம் வழங்கல்
ADDED : செப் 20, 2025 01:59 AM
நாமக்கல், நாமக்கல் தாலுகாவில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், 415 பயனாளிகளுக்கு, 1.48 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 24 நகர்ப்புறம், 15 ஊரக பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்து வருகிறது. மொத்தம், 238 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை, 196 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இம்முகாமில், 86,565 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், முகாம் நடந்த அன்றே, உடனடி நடவடிக்கையாக, 9,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 60,252 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. மேலும், 3-ம் கட்டமாக, கடந்த, 15 முதல், வரும், அக்., 10 வரை, 60 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் தாலுகாவில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், 425 பேருக்கு, 1.48 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், ஆர்.டி.ஓ., சாந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.