/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேற்கு மாவட்ட காங்., ஆலோசனை கூட்டம்
/
மேற்கு மாவட்ட காங்., ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 03, 2025 12:49 AM
திருச்செங்கோடு, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில், வரும், 7ல் திருநெல்வேலியில் நடக்க உள்ள காங்., மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. மேற்கு மாவட்ட காங்., தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
காங்., கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''ஓட்டு திருட்டு, வாக்காளர்கள் பெயர் நீக்கம் ஆகியவற்றை கண்டுபிடித்து மக்களிடம் ஆதாரங்களுடன் ராகுல் எடுத்துக்கூறியதை தொடர்ந்து, காங்., மகத்தான எழுச்சியை பெற்று புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இதுபோல் ஓட்டு திருட்டு நடந்து விடக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும், 7ல் திருநெல்வேலி மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இதில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். மாநாட்டிற்கு வரும்போதும், மாநாடு முடிந்து செல்லும்போதும் கவனத்துடன் பயணிக்க வேண்டும்,'' என்றார்.