/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் அமைச்சர் தொகுதியில் என்ன முன்னேற்றம்: எம்.பி., கேள்வி
/
முன்னாள் அமைச்சர் தொகுதியில் என்ன முன்னேற்றம்: எம்.பி., கேள்வி
முன்னாள் அமைச்சர் தொகுதியில் என்ன முன்னேற்றம்: எம்.பி., கேள்வி
முன்னாள் அமைச்சர் தொகுதியில் என்ன முன்னேற்றம்: எம்.பி., கேள்வி
ADDED : நவ 18, 2025 01:59 AM
நாமகிரிப்பேட்டை, ''முன்னாள் அமைச்சர் தங்கமணி தொகுதியில், என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி எழுப்பினார்.
நாமரிகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பப்பட்டி, ஜேடர்பாளையம் முதல் வெள்ளாளப்பட்டி, பச்சுடையாம்பாளைம் வரை உள்ள கிராமத்து சாலைகளை, மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தொப்பப்பட்டியில் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராசிபுரத்தில், 'டைடல் பார்க்' வரக்கூடாது என, முன்னாள் அமைச்சர் தங்கமணி போராட்டம் நடத்தினார். தங்கமணி தொகுதியான குமாரபாளையத்தில் தான் கிட்னி திருட்டு நடந்துள்ளது. தங்கமணி இதுவரை அவரது தொகுதியில் என்ன வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மக்களுக்கான குடிநீர், பட்டா போன்ற தேவைகளை செய்யவில்லை. ஆனால், அவற்றை இன்று, தி.மு.க., அரசு முழுமையாக வழங்கி வருகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிமன்றத்துக்கு சென்றபோது அவருக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.
துாத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்றவை, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததை தடுக்கவில்லை. யார் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 2026ல் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

