/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நீரை 4ம் முறை ஆய்வு சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
/
சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நீரை 4ம் முறை ஆய்வு சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நீரை 4ம் முறை ஆய்வு சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நீரை 4ம் முறை ஆய்வு சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
ADDED : நவ 24, 2024 02:53 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நீரை, மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், 4வது முறையாக ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விதிமீறி செயல்படும் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றும் சாயக்க-ழிவால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களுக்கு மேலாக சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வருகிறது. இ.ஆர்., தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்றில், சாயக்கழி-வுநீர் ஊற்றெடுத்து வருகிறது.குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், கடந்த, 10 நாளில், 4 முறை நீரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். கிணற்று நீரை முழுவதுமாக வெளியேற்றிய பின்பும், மீண்டும் சாயக்க-ழிவுநீர் ஊற்றெடுக்கிறது. ஆனால், எந்த சாய ஆலைகள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, மாவட்ட கலெக்டர் உமா, சாயக்கழிவுநீர் கலந்த கிணற்றை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தேவாங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: இப்பகுதியில் செயல்படும் சாய ஆலைகள், டம்மி-யான ஆழ்துளை கிணறு அமைத்து அதில் சாயக்கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீரில், சாயக்கழிவு கலந்-துள்ளது. பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை பார்த்தாலே, சாயக்கழி-வுநீர் கலந்திருப்பது தெரிந்து விடும். சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து ஆய்வு மட்டுமே செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் சாயக்கழிவுநீர் பாதிப்பு அதி-கரித்து வருகிறது. எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்க, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.