/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா
/
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா
ADDED : டிச 08, 2024 03:52 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 28; நுாற்பாலை தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா, 22. இவர்களுக்கு, கடந்த, 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும், கணவன், மனைவி இடையே சண்டை ஏற்-பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த நந்தகுமார், சுலோச்ச-னாவை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சுலோச்சனா, பள்-ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு-கிறார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்-துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சுலோச்சனா, புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று உறவினருடன் பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறுகையில், 'சுலோச்சனா புகார் மீது வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை கைது செய்துள்ளோம்,'' என்றனர்.