sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லுமா?

/

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லுமா?

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லுமா?

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லுமா?


ADDED : நவ 24, 2024 03:07 AM

Google News

ADDED : நவ 24, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில் இருந்து, கடந்த, 10 முதல், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அனைத்து மப்சல் பஸ்களும் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து வரும் பஸ்கள், நேரடியாக புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் சென்றுவிடுகின்றன. கோவை, ஈரோடு, மதுரை, கரூர் வழித்தட பஸ்கள், நல்லிபாளையம், வள்ளிபுரம் வழியாக, புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல வேண்டும்.

திருச்சி, துறையூர், மோகனுார் வழித்தடத்தில் இருந்து வரும் பஸ்கள், அண்ணாதுரை சிலை அருகே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். ஆனால், திருச்சி, துறையூரில் இருந்து வரும் பஸ்கள், டிராவலர்ஸ் பங்களா முன் பயணிகளை இறக்கி செல்கின்றனர். இந்த பஸ்கள் எதுவும், பழைய பஸ் ஸ்டாண்-டிற்குள் வராததால், கடைகளில் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கமிஷனர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்-குமார் வெள்ளையன் பேசுகையில், ''திருச்சி, துறையூர், சேந்தமங்-கலம், மோகனுார் செல்லும் புறநகர் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும்,'' என்றார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோதி குப்பு-சாமி பேசுகையில், ''பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல போதிய கால அவகாசம் இல்லை. அதனால், பஸ்கள் உள்ளே செல்ல முடியாது,'' என்றார்.

இறுதியில், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காண்ப-தாக முடிவு செய்யப்பட்டது.

நாளை முழு கடையடைப்பு...

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் துறையூர், திருச்சி, மோகனுார் செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை (நவ., 25) காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, நாமக்கல் நகரில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதையொட்டி, நாமக்கல் நகர அனைத்து வணிகர்கள் சங்க நிர்-வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகித்தார்.

நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி, மாநில இணை செயலாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us