/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகரில் சுற்றுவட்ட பஸ்கள் இயக்கப்படுமா? புது பஸ் ஸ்டாண்ட் துவங்குவதால் எதிர்பார்ப்பு
/
மாநகரில் சுற்றுவட்ட பஸ்கள் இயக்கப்படுமா? புது பஸ் ஸ்டாண்ட் துவங்குவதால் எதிர்பார்ப்பு
மாநகரில் சுற்றுவட்ட பஸ்கள் இயக்கப்படுமா? புது பஸ் ஸ்டாண்ட் துவங்குவதால் எதிர்பார்ப்பு
மாநகரில் சுற்றுவட்ட பஸ்கள் இயக்கப்படுமா? புது பஸ் ஸ்டாண்ட் துவங்குவதால் எதிர்பார்ப்பு
ADDED : செப் 19, 2024 07:34 AM
நாமக்கல்: 'நாமக்கல் மாநகர புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவ கல்லுாரியை இணைத்து, மாநகர சுற்றுவட்ட பஸ்கள் இயக்கப்படுமா' என, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட், சேலம் மெயின் ரோடு, முத-லைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்-டுக்கு வர உள்ளது. நாமக்கல் மாநகர பொதுமக்களின் சிரமங்-களை போக்கும் வகையில், நகர வளர்ச்சியை
கருத்தில் கொண்டும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றை இணைக்கும் வகையில், சுற்றுவட்ட
பஸ்களை இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.மாநகர புதிய பஸ் ஸ்டாண்ட் - பழைய பஸ் ஸ்டாண்ட் - ரயில் நிலையம் - நாமக்கல் கலெக்டர் அலுவலகம் - ஆர்.டி.ஓ., அலுவ-லகம் - அரசு சட்டக்கல்லுாரி - மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனை - புதிய பஸ் ஸ்டாண்ட்.
மாநகர புதிய பஸ் ஸ்டாண்ட் - நாமக்கல் கலெக்டர் அலுவலகம் - ஆர்.டி.ஓ., அலுவலகம் - அரசு சட்டக்கல்லுாரி - அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை - பழைய பஸ் ஸ்டாண்ட் - ரயில் நிலையம் - பழைய பஸ் ஸ்டாண்ட்
- புதிய பஸ் ஸ்டாண்ட் என, இரண்டு வழித்த-டத்தில், 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் இயக்கினால், நாமக்கல் மாநகர மக்களுக்கு மட்டும் இன்றி, நாமக்கல் வந்து செல்லும் அனைத்து பகுதி மக்களுக்கும் உதவியாக
இருக்கும்.மற்ற நகரங்களை போல், நாமக்கல் மாநகரும் போதுமான மாந-கர பஸ் வசதியை பெறும். நாமக்கல் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் விரைவில் சுற்று வட்ட பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். அனைத்து கட்சி நிர்வாகி-களும், நாமக்கல் மாநகர முன்னேற்றத்திற்காவும், மக்களின் சிர-மங்களை நீக்கவும், சுற்று வட்ட மாநகர பஸ்களை இயக்க அர-சிடம் வலியுறுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.