/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொது கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா
/
பொது கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா
ADDED : ஆக 28, 2025 01:53 AM
எருமப்பட்டி, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியன் பவித்திரம் பஸ் ஸ்டாப்பை தினமும் ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாப்பிற்கு வருவோர், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பஞ்., சார்பில் பஸ் ஸ்டாப் அருகே பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பொது கழிப்பிடம் திறக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது பெயரளவிற்கு திறக்கப்பட்டு, சில நிமிடங்களில் பூட்டி வைக்கப்படுகிறது.
இதனால், வெளியூரில் இருந்து வரும் பயணிகள் முதல் கிராம மக்கள் வரை கழிப்பிடம் செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, இந்த பொது கழிப்பிடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

