/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வு பெற்ற செவிலியரிடம் வழிப்பறி செய்த பெண் கைது
/
ஓய்வு பெற்ற செவிலியரிடம் வழிப்பறி செய்த பெண் கைது
ADDED : செப் 05, 2025 01:17 AM
ராசிபுரம், புதுசத்திரம் அருகே, ஓய்வு பெற்ற செவிலிய பெண்ணை டூவீலரில் அழைத்துச் சென்று, 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதன்சந்தை பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மனைவி வசந்தகுமாரி, 61, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் புதன்சந்தையில் இருந்து, புதன்கிழமை பாலப்பாளையம் பகுதிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியே டூவீலரில் வந்த பெண் ஒருவர், பாலப்பாளையத்தில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
வழியில் மூணுசாவடி அருகே, கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் இதனை கண்டு வசந்தகுமாரி கூச்சலிடவே, அந்த பெண் வசந்தகுமாரி முகத்தில் மிளகாய் பொடி துாவிவிட்டு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் இருந்த கை பையை, பறித்துச் சென்றார். இது குறித்து வசந்தகுமாரி கொடுத்த புகார்படி, புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில், வழிப்பறியில் ஈடுபட்டது புதுசத்திரம், இந்திரா நகரை சேர்ந்த சலவை தொழிலாளி விவேக் மனைவி லட்சுமி, 24, என்பது தெரிந்தது. இதையடுத்து லட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த, 19,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.