/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அருகே விபத்தில் பெண் பலி
/
ராசிபுரம் அருகே விபத்தில் பெண் பலி
ADDED : ஜூலை 02, 2024 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: நாமக்கல் அடுத்த போதுப்பட்டியை சேர்ந்தவர் ஹாஜி, 49; லாரி மெக்கானிக். இவர், நேற்று முன்-தினம் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்-சிக்கு சென்றார். பின், இரவு டூவீலரில் மனைவி பாத்திமா, 42, மகள் பஷீரூன், 22, ஆகியோருடன் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். ராசி-புரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி அருகே சென்ற-போது, அடையாளம் தெரியாத வாகனம் ஹாஜி டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ஹாஜி, பஷீரூன் ஆகியோரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.