/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருட பஞ்சமியையொட்டி பெண்கள் பால்குட ஊர்வலம்
/
கருட பஞ்சமியையொட்டி பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED : செப் 09, 2024 06:51 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கருட பஞ்சமி விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து சூடிக்கொடுத்த சுடர் கொடியாள், ஆண்டாள் நாச்சியார் மாலை இக்கோவிலுக்கு, நேற்று கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து, அந்த மாலை கூடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மாலை ஊர்வலத்துடன் நுாற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பின், லட்சுமி நாராயணருக்கும், கருடாழ்வாருக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அனைவருக்கும் தாம்பூல தட்டு, மங்கள பொருட்கள், ஸ்ரீகருடாத்ரி பக்த குழு சார்பில் வழங்கப்பட்டது.