/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கால்நடை மருத்துவ கல்லுாரியில் மகளிர் விடுதி: எம்.பி., அடிக்கல்
/
கால்நடை மருத்துவ கல்லுாரியில் மகளிர் விடுதி: எம்.பி., அடிக்கல்
கால்நடை மருத்துவ கல்லுாரியில் மகளிர் விடுதி: எம்.பி., அடிக்கல்
கால்நடை மருத்துவ கல்லுாரியில் மகளிர் விடுதி: எம்.பி., அடிக்கல்
ADDED : செப் 21, 2024 03:11 AM
மோகனுார்: தொகுதி மேம்பாட்டு நிதி, 75 லட்சம் ரூபாயில் கால்நடை மருத்-துவ கல்லுாரியில் மகளிர் கூடுதல் விடுதி கட்டடத்திற்கு, எம்.பி., ராஜேஸ்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மோகனுாரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், செறி-வூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிப்பு மைய துவக்க விழா நடந்-தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்-டக்குழு
உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான
ராஜேஸ்குமார், செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு உர மூட்டைகளை
வழங்கினார்.
தொடர்ந்து, மோகனுார் பி.டி.ஓ., அலுவலகம் முன், துாய்மையே சேவை இயக்கம் சார்பில் நடந்த சுகாதார விழிப்புணர்வு பேரணி-யையும்,
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 75 லட்சம் ரூபாய் மதிப்பில்,
மகளிர் விடுதி கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியும், எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கல்லுாரி முதல்வர் செல்வராஜூ, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மேலாண் இயக்குனர் மல்லிகா, அட்மா திட்ட தலைவர் நவலடி, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.