/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாசூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்
/
துாசூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : மார் 31, 2025 03:07 AM
எருமப்பட்டி: நாமக்கல், ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த சாலையில் நடக்கும் விபத்துகளை தடுக்க, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்-துறை மூலம் வளைவுகள் இல்லாத சாலை விரிவாக்கம் செய்யும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ள இப்பணி, முதலில் சாலையில் உள்ள பெட்டி பாலங்கள், பெரிய பாலங்கள் கட்டும் பணி துவங்-கியுள்ளது. இதில், துாசூர் அருகே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகி-றது. இதற்காக, பெரிய ராட்சத இயந்திரங்களை கொண்டு, பழைய பாலத்தை இடிக்கும் பணி நடக்கிறது.இடிக்கும் பணி முடிந்ததும், 40 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலத்-திற்கு உயர்மட்ட இரு வழிப்பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்-பணி, மூன்று மாதத்தில் முடியும் எனவும், இதேபோல், பல இடங்களில் பாலம் அமைக்கும் பணி முடிந்ததும், சாலை அமைக்கும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.