/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தை - கொல்லிமலை சாலை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்
/
சேந்தை - கொல்லிமலை சாலை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்
சேந்தை - கொல்லிமலை சாலை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்
சேந்தை - கொல்லிமலை சாலை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்
ADDED : அக் 16, 2025 01:23 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் வழியில், சேந்தமங்கலம் புறவழிச்சாலை முதல் மாசி மலையான் கோவில் வரை உள்ள சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. கொல்லிமலை செல்லும் பயணிகள், பெரும்பாலும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்தும்போது டூவீலரில் வருபவர்கள் வேகமாக வருவதால், எதிரே வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இந்த சாலையின் ஒருபுறம் பொம்மசமுத்திரம் ஏரி, மறுபுறம் பெரிய பள்ளம் என்ற அமைப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.