ADDED : அக் 16, 2025 01:22 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, டி.வி.எஸ்., மேடு அடுத்த முனியப்பன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன், 21, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார், 25, ஆகிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 400 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் போதை மாத்திரைகளை ஆன்லைன் வழியாக ஒரு மாத்திரை, 35 ரூபாய்க்கு வாங்கி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே ஈரோடு, நாமக்கல், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளது
குறிப்பிடத்தக்கது.