/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 கோடி பனை விதை நடும் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
/
6 கோடி பனை விதை நடும் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
6 கோடி பனை விதை நடும் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
6 கோடி பனை விதை நடும் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 16, 2025 01:21 AM
நாமக்கல், தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, 2025ம் ஆண்டிற்கு, தமிழகம் முழுவதும், 6 கோடி பனை விதைகள் நடுவதை இலக்காக கொண்டு, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நீர்
நிலைகள், தரிசு நிலங்கள் மற்றும் பனை காடுகளை உருவாக்குவதற்கு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், 4.11 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து, நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வீசானம் ஏரி பகுதியில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பனை விதைகளை நடவு செய்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில், கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, 5,000 பனை விதைகளை நடவு செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் உழவர் சந்தை அருகே, 4 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டுமான பணிகள், கொசவம்பட்டியில், 23 கோடி ரூபாய் மதிப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி, பொன்நகர் பகுதியில், 1.72 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, 'பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, மக்கள் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும்' என, உத்தர விட்டார்.
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.