/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு உரிமம், பதிவு சான்று பெறுவது கட்டாயம்
/
தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு உரிமம், பதிவு சான்று பெறுவது கட்டாயம்
தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு உரிமம், பதிவு சான்று பெறுவது கட்டாயம்
தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு உரிமம், பதிவு சான்று பெறுவது கட்டாயம்
ADDED : அக் 16, 2025 01:21 AM
நாமக்கல், 'தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் தயாரிப்பதற்கு உரிமம் அல்லது பதிவு சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகை காலங்களில், தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள், ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று, விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்க கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. பண்டிகை கால இனிப்பு வகைகளை, பேக்கிங் செய்யும் போது, பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விபரச்சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது. செய்தித்தாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.