/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் மண் அரிப்பு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் மண் அரிப்பு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 16, 2025 01:20 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், கரட்டுபாளையம் திருமணிமுத்தாறு அருகே, மாணிக்கம்பாளையம்- எலச்சிபாளையம் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும், பல இடங்களில் நீண்ட நாட்களாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக காணப்படுகிறது. இந்த சாலையில், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு, தனியார் பஸ்கள், தறி பட்டறைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் என, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக, இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர மண் அரிப்பில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழல்உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். காலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, மண் அரிப்பை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.