/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி ஸ்வீட் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ADDED : அக் 16, 2025 01:20 AM
பள்ளிப்பாளையம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குமாரபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வெப்படை, படவீடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இனிப்பு, காரம் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் ஆகியோர், அந்த நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, செயற்கை வண்ணங்களை, இனிப்பு வகைகளில் குறைவாக பயன்படுத்த வேண்டும். கார வகைகளில் அறவே தவிர்க்க வேண்டும். மேலும், பால் இனிப்பு வகைகளை, மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்
கூடாது. மேலும், பணியாளர்கள் தலைக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என, தெரிவித்தனர். ஆய்வு செய்யப்பட்ட இனிப்பு, கார வகைகளை மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.