/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி அதிபர் மொபட்டில் ரூ.1 லட்சம் திருடியவர்களுக்கு வலை
/
லாரி அதிபர் மொபட்டில் ரூ.1 லட்சம் திருடியவர்களுக்கு வலை
லாரி அதிபர் மொபட்டில் ரூ.1 லட்சம் திருடியவர்களுக்கு வலை
லாரி அதிபர் மொபட்டில் ரூ.1 லட்சம் திருடியவர்களுக்கு வலை
ADDED : அக் 16, 2025 01:19 AM
நாமக்கல், லாரி அதிபர், நகை அடமானம் வைத்த பணத்தை மொபட்டில் வைத்து எடுத்து சென்ற போது, மர்ம நபர்கள் திருடி சென்றனர். நாமக்கல்-மோகனுார் சாலை, ஆதவன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜா, 64; லாரி அதிபர். இவர், கடந்த, 13 மாலை, 3:00 மணிக்கு, நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், தங்க செயினை அடமானம் வைத்து, ஒரு லட்சத்து, 5,000 ரூபாய் வாங்கியுள்ளார். அதில், 1,000 ரூபாயை எடுத்து சட்டை பையில் வைத்துக்கொண்டார்.
மீதமுள்ள பணத்தை, மொபட் டிக்கியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். மோகனுார் சாலையில் பழக்கடை ஒன்றின் முன் மொபட்டை நிறுத்திவிட்டு, கடைக்குள் சென்று பழம் வாங்கியுள்ளார்.
பின், வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது, டிக்கியை உடைத்து மர்ம நபர்கள், ஒரு லட்சத்து, 4,000 ரூபாயை திருடி சென்றிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புகார்படி, நேற்று நாமக்கல் போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மொபட் டிக்கியை உடைத்த, இரண்டு மர்ம நபர்கள், பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.