/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலைவாய்ப்பு முகாம் 317 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாம் 317 பேருக்கு பணி ஆணை
ADDED : செப் 22, 2024 06:36 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மகேந்திரா இன்ஜி., கல்லுாரியில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பணி நியமன ஆணை வழங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 2,103 பேர் கலந்துகொண்டனர். 113 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
மொத்தம், 317 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாவட்டம் முழுதும் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மகேந்திரா கல்விக்குழும மேலாண்மை இயக்குனர் அஜய் மகாபிரசாத், பி.டி.ஓ., அருளப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.