/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி ஆணை
/
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி ஆணை
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி ஆணை
கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி ஆணை
ADDED : ஏப் 30, 2025 01:09 AM
தி.கோடு, ஏப். 30
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரியில், மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் நந்தகுமார் வரவேற்றார். பெங்களூரு ஏ.ஐ., தொழில்நுட்ப நிறுவனமான, குளோபல் நாலெட்ஜ் டெக்னாலஜி நிறுவன தலைவர் செந்தில்குமார், ''மாணவர்கள் வேலைக்கு சேர்ந்த பின்னும், தொடர்ந்து கற்றுக்கொள்பவர்களாகவே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மை நாமே மேம்படுத்திகொண்டே இருக்க முடியும்,'' என, தெரிவித்தார்.
தொடர்ந்து, ஏ.ஐ., இன்ஜினியர் பணிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் முதல், 20 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்தில் தேர்வான, ஆறு மாணவ, மாணவியருக்கும், உள்ளிருப்பு ஏ.ஐ., பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கும் பணி நியமன ஆணை வழங்கி பேசினார்.
இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே வேலைக்கு தேர்வு செய்யபட்டுள்ளதால், பணிக்கு தேர்வான அனைத்து மாணவர்களின் கல்லுாரி கட்டணத்தை குளோபல் நாலெட்ஜ் டெக்னாலஜி நிறுவனமே ஏற்றுக்கொண்டது. கல்லுாரி பெரு நிறுவன தொடர்பு இயக்குனர் முருகேசன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.