/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேதமடைந்த மின்கம்பம் மாற்றும் பணி தீவிரம்
/
சேதமடைந்த மின்கம்பம் மாற்றும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 25, 2025 01:24 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்த மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என, நகராட்சி தலைவர் செல்வராஜ், மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று கண்டிப்புதுார் நகராட்சி துவக்கப்பள்ளி அருகிலும், அம்மன் கோவில் வீதியிலும் உள்ள சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது. இப்பணியை, நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆய்வு செய்தார். மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.