ADDED : நவ 17, 2025 03:53 AM
நாமகிரிப்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், சாத்தான்குடி பகுதியை சேர்ந்த மணி மகன் விஜி, 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறு-பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அதே மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருணம் செய்து கொண்டு, நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை தொப்-பபட்டியில் உள்ள செங்கல் சூளையில், கடந்த, 8 மாதமாக தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, விஜி அதிகளவு மதுபோதையில் வந்து அவரது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் விஜியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், விஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

