ADDED : ஆக 16, 2024 01:09 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.
சட்டீஸ்கர் மாநிலம், ராஜநந்கான் அருகே மண்பூர் பகுதியை சேர்ந்த மகருராம் என்பவரது மகன் மகேந்திரகுமார், 21. இவர் பரமத்தி அருகே பில்லுாரை சேர்ந்த தங்கவேல் என்பவரது ரிக் வாகனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் ரிக்வண்டிக்கு மகேந்திர குமார் வெல்டிங் வைத்துக் கொண்டு இருந்ததார். அப்போது, எலக்ட்ரிக் ஒயர் உருகி லாரியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் வெல்டிங் வைத்துக் கொண்டு இருந்த மகேந்திர குமார், மின்சாரம் தாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மகேந்திரகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

