/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 9, 10ல் பயிலரங்கம், கருத்தரங்கு
/
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 9, 10ல் பயிலரங்கம், கருத்தரங்கு
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 9, 10ல் பயிலரங்கம், கருத்தரங்கு
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 9, 10ல் பயிலரங்கம், கருத்தரங்கு
ADDED : செப் 03, 2025 12:47 AM
நாமக்கல், 'தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம், வரும், 9ல் தொடங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடக்க துணைபுரியும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கு ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வரும், 9, 10 என, இரண்டு நாட்கள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர் அல்லது உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர் நிலையில் உள்ள அரசு பணியாளர்கள் கலந்துகொள்ளலாம். வரும், 10 மாலை, 3:00 மணிக்கு, கலெக்டர் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்களுடன் ஆட்சிமொழி கருத்தரங்கம் நடக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.