/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 02, 2025 02:57 AM
ப.வேலுார், உலக எய்ட்ஸ் தினமான நேற்று, ப.வேலுார் அருகே, பொத்தனுாரில் செயல்பட்டு வரும், 'வேர்டு' நிறுவனம் மற்றும் எம்.பி.டி., யூகே இணைந்து, பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
விழாவில், தலைமை தாங்கி பேசிய விவேகானந்தா கல்வி குழும நிர்வாகி ராமசாமி, “மாணவர்களுக்கான இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் அவசியமானது,” என்றார். பேச்சாளராக பங்கேற்ற வக்கீல் பவினேஸ்கர்ணன், தனலட்சுமி, எச்.ஐ.வி., நோயின் தன்மை, பரவும் விதம், பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்தும் உலக எய்ட்ஸ் தினத்தின் நோக்கம், எச்.ஐ.வி., ஏற்படுத்தும் உளவியல் மற்றும் உடல்நல விளைவு, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினர். விழாவிற்கு வந்த அனைவரையும், வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

