ADDED : ஜூன் 05, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம்
யூனியன், கொன்னையார் கிராமத்தில், நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை
முன்னிட்டு, பி.டி.ஓ., பாலவிநாயகம் தலைமையில் சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தெருக்கூத்து
கலைஞர்கள் மூலம் வீடு மற்றும் கடைகளில் உற்பத்தியாகும்,
திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது குறித்தும், குப்பை
கழிவுகளை துாய்மை காவலர்களிடம் முறையாக தரம் பிரித்து வழங்குதல்
குறித்தும் நாடக வடிவில் நடித்து காண்பித்தனர். மண்டல துணை பி.டி.ஓ.,மருதமலை, பஞ்.,செயலாளர் கருணாகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
